விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி
ADDED : 259 days ago
தமிழில் தடையறத் தாக்க, தடம், மீகாமன் உள்ளிட்ட வித்தியாசமான ஆக்ஷ்ன் படங்களை இயக்கியவர் மகிழ்திருமேனி. தற்போது நடிகர் அஜித் குமாரை வைத்து ' விடாமுயற்சி' எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
மகிழ் திருமேனி தற்போது அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒரு சமயத்தில் நடிகர் விஜயிடம் மூன்று கதைகளைக் கூறினேன். அவருக்கு மூன்று கதைகளும் பிடித்தது. அதில் ஒரு படத்தின் கதையை என்னையே தேர்வு செய்ய சொன்னார். நானும் தேர்வு செய்து கூறினேன். அவருக்கு பிடித்துப்போனது. ஆனால், உதயநிதியின் கலகத்தலைவன் படத்தை முடித்து பின் அடுத்த படத்தினை இயக்க செல்லுங்கள் என்றார். இதனால் தான் அந்த சமயத்தில் விஜய் படம் நடைபெறவில்லை. இன்னும் விஜய்க்கு அந்த மூன்று கதைகளும் காத்திருக்கிறது என தெரிவித்தார்.