மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
233 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
233 days ago
தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆறு நேரடி தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. தெலுங்கு சினிமாவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மூன்றே மூன்று படங்கள் மட்டுமே வெளிவந்தன. ஜனவரி 10ல் 'கேம் சேஞ்ஜர்', 12ல் 'டாகு மகாராஜ்', 14ல் 'சங்கராந்திகி வஸ்துனம்' ஆகிய படங்கள் வந்தன.
அவற்றில் முதலில் வந்த 'கேம் சேஞ்ஜர்' படம் முதல் நாளிலேயே 186 கோடி வசூலைப் பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், ஒரு வாரத்தில்தான் அப்படம் அந்த வசூலைப் பெற்றதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 200 கோடி வசூலைக் கடந்துள்ள இப்படம் இன்னும் 125 கோடி வசூலைக் கடந்தால்தான் வியாபார ரீதியாக வெற்றி பெற முடியும் என்கிறார்கள்.
அதேசமயம் 'டாகு மகாராஜ்' படம் 100 கோடி வசூலை கடந்துள்ளது. இன்னும் சில கோடி வசூலித்தால் வெற்றிப் பட வரிசையில் இணைந்துவிடுமாம். 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 100 கோடி வசூலைக் கடந்து போட்ட முதலீட்டையும் எடுத்துவிட்டு, தற்போது லாபக் கணக்கில் நுழைந்துவிட்டதாம். இரண்டு சீனியர் ஹீரோக்களின் படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது தெலுங்குத் திரையுலகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
233 days ago
233 days ago