உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு

சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு

ஜெயம் படத்தில் அறிமுகமான ரவி அப்போதிலிருந்தே ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டு வந்தார். ஆனால் கடந்த 22 ஆண்டுகளாக ஜெயம் ரவியாக இருந்து வந்த அவர், சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றினார். அதோடு தயாரிப்பாளர், இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.

நடிகர் ரவி மோகனுக்கும், அவரது மனைவி ஆர்த்திக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று(ஜன., 18) ரவி மோகன், ஆர்த்தி இருவரும் வீடியோ காணொளி மூலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். அப்போது அவர்களை சமரசம் செய்து வைப்பதற்கான மத்தியஸ்தர்களை அழைத்துள்ளதாக அவர்களது வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தார்கள். அதையடுத்து அவர்களிடத்தில் சமரச பேச்சுவார்த்தையை நடத்திய பிறகு மீண்டும் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கை பிப்ரவரி 15ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !