உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கண்ணப்பா படத்தில் சிவன் ஆக அக்ஷய் குமார்

கண்ணப்பா படத்தில் சிவன் ஆக அக்ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகிறது. தற்போது தெலுங்கில் பிரமாண்டமான வரலாற்று பின்னனியில் உருவாகி வரும் 'கண்ணப்பா' என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் சிவனாக நடிக்கிறார்.

மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்த படத்தை இயக்கி வருகிறார். வரலாற்று பின்னனியில் சிவனை வழிபட்ட பக்தர் கண்ணப்பரை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் கண்ணப்பராக விஷ்ணு மன்சு நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தில் சிவன் ஆக அக்ஷய் குமார் நடிப்பதாக கதாபாத்திர போஸ்டருடன் அறிவித்துள்ளனர். மோகன் பாபு, சரத்குமார், காஜல் அகர்வால், பீர்த்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் ஏற்கனவே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் இவ்வருடம் ஏப்ரல் 25ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !