தாத்தாவான மகிழ்ச்சியில் ரோபோ சங்கர்
ADDED : 228 days ago
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, அப்பாவை போலவே சின்னத்திரையிலும் சினிமாவிலும் பிரபலமானவர் தான். இந்திரஜாவுக்கும் கார்த்திக் என்பவருக்கும் ஊருலகம் வியக்குமளவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை இந்திரஜா அறிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய் - சேய் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து பேரன் பிறந்த மகிழ்ச்சியை ரோபோ சங்கரும் குடும்பத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.