உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை

'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை

தெலுங்குத் திரையுலகில் கடந்த இரண்டு நாட்களாக சினிமா தயாரிப்பாளர்கள் சிலரது வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு, 'புஷ்பா 2' தயாரிப்பாளர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

இன்று 'புஷ்பா 2' படத்தின் இயக்குனர் சுகுமார் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அப்படத்திற்காக அவர் லாபத்தில் சில சதவீதம் வருவாயாகப் பெற்றதாக செய்திகள் வந்தன. அப்படம் 1800 கோடி வசூலைக் கடந்துள்ளது. மேலும், அப்படத்தின் தயாரிப்பாளர் ஹைதராபாத் புறநகரில் பல கோடி ரூபாய்க்கு இடம் வாங்கியதாகவும் அதனால்தான் வருமான வரி சோதனை நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

'புஷ்பா' தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரது வீடுகளைத் தொடர்ந்து அதில் நடித்துள்ளவர்களின் வீடுகளிலும் சோதனை நடக்குமா என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளதாகத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !