மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
251 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
251 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
251 days ago
தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக ஒரு ஸ்டைலிசான இயக்குனராக, ரசிகர்களிடம் இப்போது வரை வரவேற்பை பெற்றிருப்பவர் கவுதம் மேனன். ஒரு தயாரிப்பாளராக மாறிய பின்பு பல்வேறு பொருளாதார பிரச்னைகளை இவர் சந்தித்து வருவதால், இவரது டைரக்ஷனில் படங்கள் நிறைய வருவதில்லை. அப்படியே வெளியானாலும் மிக தாமதமாக வெளி வருகின்றன. விக்ரமை வைத்து இவர் இயக்கிய துருவ நட்சத்திரம் படம் கூட அப்படித்தான் பல வருடமாக ரிலீஸை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஏற்கனவே ஒரு நடிகராக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துவிட்ட கவுதம் மேனன் முதல் முதலாக மலையாளத்தில் நடிகர் மம்முட்டியை வைத்து டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஜனவரி 23 (நாளை) இந்த படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல யுட்யூப் சேனல்களில் மனம் திறந்து பல விஷயங்களை பேசி வருகிறார் கவுதம் மேனன். சூர்யாவுடன் துருவ நட்சத்திரம் படத்தின் போது ஏற்பட்ட அதிருப்தி குறித்து எல்லாம் வெளிப்படையாக பேசினார்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் கவுதமிடம் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் பற்றி கேட்டபோது, அதற்கு கவுதம் எந்த படம் பற்றி கேட்கிறீர்கள் ?. அது என் படம் அல்ல. அது யாரோ ஒருவருடையது, அதில் பாடல்களை நான் இயக்கியிருந்தேன்” என்று கூறினார்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது தனுஷ் செய்த சில பிரச்னைகளால் படம் வெளிவர தாமதமானது என்று அப்போது பரபரப்பாக சொல்லப்பட்டது. ஆனால் அதன் கதை விஷயத்திலேயே தனுஷ் மிகப்பெரிய அளவில் குறுக்கீடு செய்து இருக்கிறார் என்பதும் அதனாலேயே அது தன் படம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு கவுதம் மேனன் காயப்பட்டு இருக்கிறார் என்பதும் இந்த பேட்டியின் மூலம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது.
251 days ago
251 days ago
251 days ago