உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா

ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா

நடிகர் ரஜினிகாந்த் தனது சூப்பர் ஹிட்டான பாட்ஷா, சந்திரமுகி படங்களின் இரண்டாம் பாக கதைகளில் நடிக்க மறுத்துவிட்டார். என்றாலும் தற்போது நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போகிறார். இதற்கு முக்கிய காரணம் நெல்சன் சொன்ன கதை ரஜினியை பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ணிவிட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது.

ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த பல நடிகர் நடிகைகள் இந்த படத்திலும் நடிக்கப் போகிறார்கள். என்றாலும் ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் நெல்சன். அவர் மட்டுமின்றி இன்னும் சில பிறமொழி நடிகர்களையும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !