மீண்டும் மல்டி ஸ்டார் படம் இயக்குகிறார் மணிரத்னம்
ADDED : 300 days ago
செக்கச் சிவந்த வானம் என்ற படத்தை அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிலம்பரசன், அருண் விஜய் என மல்டி ஸ்டார்களை வைத்து இயக்கிய மணிரத்னம், அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் நடிப்பில் இயக்கினார்.
தற்போது தக்லைப் படத்தை கமல்ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் இயக்கி உள்ளார். இதையடுத்து தனது புதிய படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கப் போவதாக செய்தி வெளியானது. இதுகுறித்து மணிரத்னம் வட்டாரத்தை விசாரித்தபோது, மீண்டும் புதுமுகங்களை வைத்து மணிரத்னம் படம் இயக்க வாய்ப்பில்லை. அவரது அடுத்த படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் மல்டி ஹீரோ கதையில்தான் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.