தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. தற்போது அஜித் ஜோடியாக 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்திலும் நடித்து முடித்தவர், சூர்யா ஜோடியாக 'சூர்யா 45' படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக திரிஷா சினிமாவில் நடிப்பதை விட்டு விலகி அரசியலில் இறங்கப் போவதாக செய்திகள் வந்தன. ஆனால், அது குறித்து அவரது அம்மா அளித்த பேட்டி ஒன்றில், அது தவறான செய்தி, திரிஷா அரசியலில் இறங்க மாட்டார் எனத் தெரிவித்துள்ளார். 40 வயதைக் கடந்த திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். '96' படத்தின் மூலம் கிடைத்த திருப்புமுனையால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்து வருகிறார்.