உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு!

ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு!


ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ‛ஆர் ஆர் ஆர்' படத்தை இயக்கிய ராஜமவுலி, அடுத்தபடியாக மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ராவை முதன்மைப்படுத்தி தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். அடுத்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப் போகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சிங்கத்தை வைத்து வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டார் ராஜமவுலி. அதில், கென்யாவில் தன்னுடைய அட்வெஞ்சர் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதை தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ராஜமவுலி பகிர்ந்தவுடன், அப்படத்தின் நாயகனாக மகேஷ் பாபு, தன்னுடைய போக்கிரி படத்தின் டயலாக் மூலம் ஒரு பதில் கொடுத்து இருந்தார். அதையடுத்து அவரது மனைவி நர்மதா, அந்த வீடியோவிற்கு கிளாப்சிங் எமோஜிகளை வெளியிட்டு இருந்தார். இந்த கிளிப்ஸ் வீடியோ ராஜமவுலியின் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகி உள்ளது. விலங்குகளை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் சிங்கத்துடன் மகேஷ் பாபு சண்டையிடும் காட்சிகளும் இடம்பெறப் போகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு கென்யா நாட்டு காடுகளில் நடைபெற உள்ள இந்த படத்திற்கு, எம் .எம். கீரவாணி இசையமைக்க, பி.எஸ். வினோத் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !