ரவி மோகன் படம் : விலகிய ஹாரிஸ் ஜெயராஜ், இணைந்த சாம் சிஎஸ்
ADDED : 272 days ago
டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் அவரது 34வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. படத்திற்கான கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னகுமார் எழுதுகிறார்.
நாயகியாக தவுதி ஜிவால், முக்கிய வேடங்களில் பிரதீப் ஆண்டனி, சக்தி வாசு ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என அறிவித்திருந்த நிலையில் இப்போது ஒரு சில காரணங்களால் அவர் விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதில் சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நாளை படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது. அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் சாம் சிஎஸ் பெயர் இடம் பெற்றுள்ளது.