100 கோடி லாபம் தந்த 'சங்கராந்திகி வஸ்துனம்'
தெலுங்குத் திரையுலகத்தில் பொங்கலுக்கு வெளிவந்த மற்ற பிரம்மாண்டப் படங்களைக் காட்டிலும் குறைந்த பட்ஜெட்டில் தயாரான 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 100 கோடி லாபத்தைத் தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜு தயாரிப்பில் இந்த பொங்கலுக்கு ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்ஜர்', வெங்கடேஷ் நடித்த 'சங்கராந்திகி வஸ்துனம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'கேம் சேஞ்ஜர்' படம் அதன் பட்ஜெட் என்று சொல்லப்பட்ட 400 கோடி ரூபாயில் 200 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தைக் கொடுத்தது எனத் தகவல்.
அதே சமயம் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான 'சங்கராந்திகி வஸ்தனம்' படம் சுமார் 300 கோடி வசூலை நெருங்கி 100 கோடிக்கும் அதிகமான லாபத்தைக் கொடுத்துள்ளதாம். ஆந்திரா, தெலங்கானாவில் மட்டும் இப்படம் 200 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
பாலகிருஷ்ணா நடித்து பொங்கலுக்கு வெளிவந்த 'டாக்கு மகராஜ்' படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தாலும் இன்னும் லாபக் கணக்கை ஆரம்பிக்கவில்லையாம்.