மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
216 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
216 days ago
தெலுங்கில் நடிகர் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வரும் பிப்ரவரி 7ம் தேதி வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. 'கார்த்திகேயா 2' படத்தை இயக்கிய சந்து மொன்டேட்டி இயக்கியுள்ள இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா வெளியீடாக ரிலீசாகிறது.
படம் பற்றி நடிகர் நாக சைதன்யா அளித்துள்ள பேட்டி: இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் சம்மந்தப்பட்ட கதை என்பதால் 30 நாட்கள் கடலிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ராஜூ கதாபாத்திரத்தில் நானும், சத்யா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளோம். இருவருக்குமான காதலும், எமோஷனலான காட்சிகளும் அதிகம் இருக்கும்.
வாடகைக்கு படகு எடுத்து மீன் பிடிக்க சென்றவர்கள், பாகிஸ்தான் வசம் சிக்கி சிறை வைக்கப்படுவதை மையமாக கொண்ட கதையில் உருவாகியுள்ளது. உண்மையில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நான் என 3 பேரும் ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் சென்று சந்தித்தோம். அவர்களிடம் நடந்த சம்பவத்தை கேட்டு தெரிந்துகொண்டோம். பாகிஸ்தான் சிறையில் இருக்கும் போது, அவர்களுக்கும், குடும்பத்துக்கும் கடித தொடர்பு மட்டுமே இருக்கும். இன்றைக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அந்த கடிதங்களை வைத்துள்ளனர்.
இந்த படத்தில் நான் பேசும் தெலுங்கு, புதுமாதிரியாகவும், தமிழில் கோயம்புத்தூர் ஸ்லாங் கொஞ்சம் இருக்கும். நானே பேசி நடித்துள்ளேன். ஓராண்டாக தாடியுடன் இருக்கிறேன். அடுத்த படத்தில் வேறு லுக்கில் வருவேன். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை. அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்போது அப்பா நாகார்ஜூனா (கூலி படத்தில்) நடித்து வருகிறார். நானும் லோகேஷ் படத்தில் நடிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
216 days ago
216 days ago