உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்!

ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்!


தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் அடுத்து கே.ஜி.எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது. இப்படத்தை தற்காலிகமாக 'என்டிஆர் - நீல்' எனும் தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் இணைந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !