நானியுடன் மூன்றாவது முறையாக இணைந்த அனிருத்!
ADDED : 260 days ago
தற்போது தமிழில் ‛கூலி , விடாமுயற்சி, ஜனநாயகன், ஜெயிலர்-2' உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தெலுங்கில் நானி நடிக்கும் புதிய படத்திற்கும் இசையமைக்கிறார். ஏற்கனவே நானி நடித்த ஜெர்சி, கேங்லீடர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், தற்போது அவர் நடிக்கும் புதிய படமான ‛பாரடைஸ்' மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். எஸ்எல்பி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படம் குறித்த போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நானி நடிப்பில் ‛தசரா' என்ற படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர்தான் இந்த பாரடைஸ் படத்தையும் இயக்குகிறார்.