மேலும் செய்திகள்
காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம்
241 days ago
திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ்
241 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இன்று அவருடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு நள்ளிரவில் அவருடைய 49வது படத்தின் அறிவிப்பு வெளியானது. 'பார்க்கிங்' படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் அப்படத்தை இயக்குகிறார்.
அதற்கடுத்து சற்று முன் அவருடைய 50வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இப்படத்தைத் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான அட்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கிறார் சிம்பு. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்க யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. அது குறித்த அறிவிப்பும் வெளியானது. ஆனால், அதன்பின் அதிலிருந்து கமல் விலகிவிட்டார். பின்னர் வேறு தயாரிப்பாளர்களிடமும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சிம்புவே தயாரிப்பில் இறங்கிவிட்டார். இப்படம் ஒரு சரித்திரப் படமாக எடுக்கப்பட உள்ளது.
சிம்புவின் பிறந்தநாளில் அடுத்தடுத்து அவரது 49 மற்றும் 50வது படங்களின் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
241 days ago
241 days ago