உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லிமிட் தாண்டினால் தடை: மகளுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர்

லிமிட் தாண்டினால் தடை: மகளுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர்


'ரொமான்டிக்' நாயகியாக வளர துவங்கி இருக்கும் பிரமாண்ட இயக்குனரின் மகள், தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் மிக ஜாலியாக கும்மாளமடித்து வருகிறார். இந்த தகவல் பிரமாண்டத்திற்கு தெரிந்ததும், செம கடுப்பாகி விட்டார்.

உடனே, தன் மகளை அழைத்து, 'ஆரம்பத்தில் சொன்னது போன்று நடிகர்களுடன் கோடு போட்டு பழக வேண்டும். நட்பு என்ற பெயரில், 'லிமிட்' தாண்டினால், சினிமாவில் நடிப்பதற்கே தடை போட்டு விடுவேன்...' என, மகளை எச்சரித்துள்ளார். இதையடுத்து, தற்போது அடக்கி வாசிக்க துவங்கி இருக்கிறார், பிரமாண்டத்தின் மகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !