மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
213 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
213 days ago
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
213 days ago
பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'கபாலி' படத்தை தெலுங்கில் வெளியிட்ட வினியோகஸ்தர் சுங்கர கே.பி.சவுத்ரி. 44 வயதான அவர் கோவா-வில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த ஆறேழு மாதங்களாக அந்த வாடகை அபார்ட்மென்ட்டில் அவர் வசித்து வருகிறாராம். தற்கொலை குறிப்பு ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளதாகவும் அது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிகிறது.
தெலுங்கானாவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் போனகால் இடத்தைச் சேர்ந்தவர் கே.பி.சவுத்ரி. பி.டெக். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தவர். புனேவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜியில் டைரக்டர் ஆப் ஆபரேஷ்ன்ஸ் பதவி வகித்தவர். சில தெலுங்குப் படங்களையும் தயாரித்துள்ளார். 2023ம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். திரைப்படத் தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் போதைக் கடத்தலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
சிறையிலிருந்து வந்த பின்பு கோவா சென்று அங்கு கிளப் ஒன்றை ஆரம்பித்தார் என்றும், அதிலும் நஷ்டம் ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள். அவரது தற்கொலை தெலுங்குத் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
213 days ago
213 days ago
213 days ago