மேலும் செய்திகள்
மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது!
222 days ago
ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி!
222 days ago
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கியவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அந்த படத்தின் மூலம் கவனிக்க வைத்தவர், அதன் பிறகு கடந்த வருடம் ஹிந்தியில் ரன்பீர் கபூரை வைத்து ஆயிரம் கோடி வசூலித்த 'அனிமல்' என்கிற படத்தை இயக்கி இன்னும் உயரத்திற்கு சென்றார். அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நாகசைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் 'தண்டேல்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சந்தீப் ரெட்டி வங்கா.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “அர்ஜுன் ரெட்டி படத்திற்கு, முதல் முறையாக சாய் பல்லவியை தான் ஒப்பந்தம் செய்ய நினைத்தோம். ஆனால் அவரது மேனேஜர் சாய்பல்லவி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து நடிக்க மாட்டார் என்று கூறியதால் அந்த எண்ணத்தை கைவிட்டேன்” என்று பேசினார்.
அதை தொடர்ந்து பேசிய சாய் பல்லவி, “இப்போதைய சூழலில் ஒரு நடிகை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் நடிப்பதற்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். எனக்கு மேனேஜர் என்று யாருமே இல்லை. நீங்கள் என் மேனேஜர் என நினைத்து யாரிடம் பேசினீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் அர்ஜுன் ரெட்டி படத்தில் ஷாலினி பாண்டே, விஜய் தேவரகொண்டா இருவருமே அற்புதமாக நடித்திருந்தார்கள். அர்ஜுன் ரெட்டி மூலம் பாலிவுட்டிற்கும் சென்று வெற்றி பெற்ற உங்களின் அடுத்த படத்தை எல்லோருமே ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறினார்.
222 days ago
222 days ago