பராசக்தி படத்தில் இணையும் மலையாள பட நடிகர்
ADDED : 266 days ago
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாக பராசக்தி உருவாகி வருகிறது. இதை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே இந்த படத்தில் பல நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடித்து மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்த மார்க்கோ படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீடன், கருடன் போன்ற நேரடி தமிழ் படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.