மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
240 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
240 days ago
டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. அதன்பிறகு சில வருடங்கள் கடந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையில் இவர் ரஜினி உடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இது அல்லாமல் சில தெலுங்கு நடிகர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
ஆனால், அது எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகராத நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனின் 24வது படத்தை இயக்கவிருந்தார் என கூறப்பட்டது. தற்போது இப்படத்தை இயக்குவதில் இருந்து சிபி சக்கரவர்த்தி விலகியுள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது. இப்போது நமக்கு கிடைத்த தகவலின் படி, சிபி சக்கரவர்த்தி அடுத்து நானி படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளதால் அந்த படத்தை இயக்கிய பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைவார் என கூறப்படுகிறது.
240 days ago
240 days ago