உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர் ஆன காரணம் குறித்து பகிர்ந்த சிம்பு

தயாரிப்பாளர் ஆன காரணம் குறித்து பகிர்ந்த சிம்பு

நடிகர் சிலம்பரசன் நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு அவரின் மூன்று படங்களின் அப்டேட் வெளியானது. அதில் ஒன்று தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு அவரது 50வது படமாக நடிக்கிறார். இந்த படத்தை அவரது ஆட்மேன் நிறுவனத்தின் மூலம் அவரே தயாரிக்கிறர்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ஸ்பேஸ் தொகுப்பில் கலந்து கொண்ட சிம்பு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி, இந்த படத்திற்காக தேசிங்கு பெரியசாமி நீண்ட காலமாக என்னுடன் பயணித்து வருகிறார். தற்போது ஓடிடி மற்றும் சாட்லைட் மார்கெட் டல் அடிப்பதால் மற்ற தயாரிப்பாளர்களை சிக்கலில் விடாமல் நானே முன்வந்து தயாரிக்கலாம் என முடிவெடுத்து தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளேன். ஏற்கனவே கமல் சாரை சந்தித்து இப்படத்தை நானே தயாரிக்க அனுமதி வாங்கினேன என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !