ரெட்டை ஜடை சிறுமியாக பிரியா பிரின்ஸ்
ADDED : 244 days ago
பல வருடங்களாக சின்னத்திரையில் பயணித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரியா பிரின்ஸ். தொகுப்பாளினியாக தொடங்கி பின் சீரியல்களில் நாயகியாக நடித்து தற்போது வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். கிட்டத்தட்ட 40 வயதை நெருங்கி விட்ட பிரியா இப்போதும் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் அழகை சுமந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் பள்ளிச் சீருடையில் ரெட்டை ஜடையுடன் வெளியிட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. இதைபார்த்த பலரும் பிரியாவின் இளைமையான தோற்றத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.