500 எபிசோடு - புதுவசந்தம் தொடருக்கு கிடைத்த வெற்றி
ADDED : 341 days ago
பிரபல தொலைக்காட்சியில் மதியம் நேரம் ஒளிபரப்பாகும் தொடர் புது வசந்தம். ஷ்யாம் ஜி, சோனியா சுரேஷ், ஷ்யாம் மற்றும் வைஷ்ணவி நாயக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது இந்த தொடர் வெற்றிகரமாக 500 வது எபிசோடை எட்டியுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சீரியல் குழுவினர் அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை பார்த்த இந்த தொடரின் ரசிகர்களும் சீரியல் குழுவினருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.