உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்!

டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்!


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்த படம் 'அமரன்'. இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக, 'லக்கி பாஸ்கர்' போன்ற படங்கள் வெளியானபோது அமரன் படத்தையும் வெளியிட்டபோதிலும், நேரடி தெலுங்கு படங்களுடன் போட்டி போட்டு அமரன் படமும் அங்கு வசூலில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த நிலையில் தற்போது அமரன் தெலுங்கு பாதிப்பு ஓடிடியில், பிரபாஸின் 'சலார், கல்கி' மற்றும் சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா' படங்களை விட டிஆர்பியில் முன்னிலை வகித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !