சந்தியாராகம் தொடரில் மாற்றப்பட்ட ஹீரோ
ADDED : 232 days ago
ஜீ தமிழில் கடந்த 2023ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் சந்தியாராகம். சுர்ஜித், அந்தாரா, ராஜீவ் பரமேஸ்வர், சந்தியா என பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் இந்த தொடரானது டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங்கை பெற்று வருகிறது. இதில் ஹீரோவாக நடிக்கும் சுர்ஜித்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால், அவர் கடந்த மாதம் சீரியலை விட்டு விலகிவிட்டார். எனவே, அவர் ஊருக்கு சென்றுவிட்டதை போல திரைக்கதையில் மாற்றம் செய்து இத்தனை நாட்கள் ஒளிபரப்பி வந்தனர். இந்நிலையில், தற்போது சுர்ஜித் கதாபாத்திரத்தில் நடிக்க , யு-டியூப் பிரபலமான மனோஜ் பிரபு என்பவரை கமிட் செய்துள்ளனர்.