போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்!
ADDED : 265 days ago
நடிகர் அசோக் செல்வன் தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் .இந்த வரிசையில் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா கதையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் 23வது படமாக புதிய படத்தில் நடிக்கின்றார். இதில் கதாநாயகியாக ஸ்டார் படத்தின் மூலம் பிரபலமான பிரீத்தி முகுந்தன் நடிக்கின்றார்.
இப்படத்தை ஓ மை கடவுளே படத்தினை தயாரித்த அசோக் செல்வனின் சகோதரி அபிநயா செல்வம் அவரது ஹேப்பி ஐ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் .தற்போது இதன் படப்பிடிப்பை பூஜை நிகழ்வுடன் தொடங்கியதாக அறிவித்துள்ளனர்.