உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛விடாமுயற்சி' இடைவேளையில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷின் ‛கிங்ஸ்டன்' டீசர்

‛விடாமுயற்சி' இடைவேளையில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷின் ‛கிங்ஸ்டன்' டீசர்


கமல் பிரகாஷ் என்பவர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள படம் ‛கிங்ஸ்டன்'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பேச்சிலர் படத்தில் நடித்த திவ்யா பாரதி மீண்டும் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி வெளியான நிலையில் தற்போது இந்த டீசரை அஜித் நடித்து திரைக்கு வந்துள்ள ‛விடாமுயற்சி' படத்தின் இடைவேளையின்போது வெளியிட்டு வருகிறார்கள்.

அதன் காரணமாகவே இந்த டீசர் இப்போது பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த படம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க கடலுக்குள் எடுக்கப்பட்ட ஒரு பேண்டஸி படமாக உருவாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ், திவ்யபாரதி இருவரும் மர்மமான முறையில் நடு கடலுக்குள் கப்பலில் சிக்கிக் கொள்வதும், அதில் இருந்து எப்படி அவர்கள் தப்பித்து வருகிறார்கள் என்ற கதையில் இந்த படம் உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !