உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா!

பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா!


தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இதில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்தியூ தாமஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வருகிறது. நாளை பிப்.10ந் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகுவதை தொடர்ந்து நாளை மறுநாள் பிப்ரவரி 11ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாசில் நடைபெறுகிறது என படக்குழு அறிவித்துள்ளனர். இதில் தனுஷ் கண்டிப்பாக கலந்து கொள்வார் என உறுதியான தகவல் நமக்கு கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !