அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்!
ADDED : 239 days ago
அஜித் நடித்து கடந்த ஆறாம் தேதி திரைக்கு வந்த படம் விடாமுயற்சி. அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இரண்டாவது நாளில் இப்படத்தின் வசூல் 10 கோடியாகி, தற்போது இறங்கு முகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஏழாம் தேதி திரைக்கு வந்த தண்டேல் படம், முதல் நாளில் உலக அளவில் 21. 27 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதையடுத்து இரண்டாவது நாளில் இந்த படம் இந்திய அளவில் 12. 65 கோடி வசூலித்திருக்கிறது. உலகளவில் 2 நாளில் தண்டேல் படம் 41.20 கோடி வசூலித்துள்ளது.