கிஸ் படத்தின் முதல் பார்வை வெளியானது : பிப்., 14ல் டீசர்
ADDED : 284 days ago
நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் முதல் முறையாக இயக்குனர் ஆக அறிமுகமாகும் படம் ‛கிஸ்'. இதில் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்க, கதாநாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜென் மார்டின் இசையமைக்கின்றார். முழுக்க முழுக்க காதல் கதையில் இப்படம் உருவாகி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது என அறிவித்திருந்த நிலையில் இன்று படத்திற்கு கிஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். போஸ்டரில் நிறைய காதலர்கள் லிப் கிஸ் பரிமாறிக் கொள்ள நடுவில் கவின் மட்டும் கண்களை மறைத்தபடி நிற்பது போன்று உள்ளது. மேலும், இப்படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.