உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா

2018 பட இயக்குனருடன் இணையும் ஆர்யா

2023ம் ஆண்டில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் '2018' . கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளியான இப்படம் மலையாளம் கடந்து இந்திய அளவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படம் 2023ம் ஆண்டிற்கான அதிகமான வசூலித்த படமாக இருந்தது.

இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூட் ஆண்டனி ஜோசப் அடுத்து தமிழில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் படம் இயக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இது அல்லாமல் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றைக் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

தற்போது சிம்புவை வைத்து இயக்கவிருந்த படம் கை மாறியுள்ளது. வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜூட் ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் ஆர்யா தான் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !