உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அண்ணா' சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் நடிகர்கள்

'அண்ணா' சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் நடிகர்கள்


ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஹிட் தொடர்களில் ஒன்று 'அண்ணா'. மிர்ச்சி செந்தில், நித்யா ராம் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த தொடர் 400 எபிசோடுகளை கடந்து மக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், கதையில் திருப்புமுனையை கொண்டு வரும் வகையில் இரண்டு புதிய கதாபாத்திரங்களுடன் புதிய ட்ராக்கை கொண்டு வர உள்ளனர். இந்த புதிய கதாபாத்திரங்களில் அஜய் மற்றும் ஸ்ரீநிதி நடிக்க இருக்கின்றனர். இதனால் அண்ணா தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !