இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்!
ADDED : 245 days ago
'மெய்யழகன்' படத்தை அடுத்து 'வாத்தியார்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் கார்த்தி, தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் 'சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் 'டாணாக்காரன்' என்ற படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் தன்னுடைய 29வது படத்தில் நடிக்க போகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கடல் பின்னணியை கொண்ட கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகப்போகிறது.
மேலும் ஏற்கனவே கார்த்தி நடித்து வெளியான 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த 'கார்த்தி 29' படத்தையும் இரண்டு பாகங்களாக எடுப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.