வருகிற ஜூலை மாதத்தில் ராஜ்யசபா எம்பி ஆகும் கமல்ஹாசன்?
ADDED : 293 days ago
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றபோது, ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது. அப்போதே 2025 ராஜ்யசபா தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது குறித்த கேள்விகள் எழுந்த போது, திமுகவுடன் கைகோர்த்தது தமிழகத்திற்காகவே தவிர, பதவிக்காக அல்ல என்று கூறியிருந்தார் கமல்ஹாசன். இந்த நிலையில்தான் தற்போது வருகிற ஜூலை மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது கமல்ஹாசனுக்கு எம்பி பதவி கொடுக்க திமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.