உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களுக்கு பஞ்சம்: எஸ்.ஜே.சூர்யா சொல்கிறார்

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களுக்கு பஞ்சம்: எஸ்.ஜே.சூர்யா சொல்கிறார்


தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த்ஷங்கர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடித்துள்னர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 21ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது: படம் சிறப்பாக வந்துள்ளது, படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். திரைத்துறையில் நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால்தான் தனுஷ் ஒரு பட்டாளத்தையே தயார் செய்து அனுப்பி வைத்துள்ளார். நிறைய இளம் நடிகர்கள், நடிகைகள் சினிமாவுக்கு வரவேண்டும்.

ஒரே சமயத்தில் இரு வேறு விதமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனராகவும், ஹாலிவுட் வரைக்கும் சென்ற தலைசிறந்த நடிகராகவும் தனுஷ் விளங்குகிறார். இந்த படத்தை பார்த்தபோது எனது 'குஷி' படத்தை பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !