மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
230 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
230 days ago
புராணங்கள், நாட்டுப்புற கதைகள், தமிழ் நாடகங்கள் சினிமாவாக தயாராகிக் கொண்டிருந்த காலத்தில் பிரெஞ்சு நாடகம் ஒன்றும் சினிமாவாக தயாரானது. ஆரம்பகால திரைப்பட எழுத்தாளரான கொத்தமங்கலம் சுப்பு ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வந்தார். இவர் எழுதிய பல நாடகங்களும் திரைப்படமானது. அதில் முக்கியமானது 'தில்லானா மோகனாம்பாள்'.
ஒரு கட்டத்தில் கொத்தமங்கலம் சுப்புவிற்கும் படம் இயக்கும் ஆசை வந்தது. அவர் இயக்கிய முதல் படம்தான் 'கண்ணம்மா என் காதலி'. இந்த படம் 'தி ஸ்கூல் ஆப் வேவ்ஸ்' என்ற நாடகத்தை தழுவி உருவானது. யாராவது பிரெஞ்சில் இருந்து திரும்பினால் அவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வி தி ஸ்கூல் ஆப் வேவ்ஸ் பார்த்தீங்களா? என்பதாக இருக்கும். அந்த அளவிற்கு அந்த நாடகம் புகழ்பெற்றிருந்தது.
கண்ணம்மா என் காதலி படத்தில் எம்.கே.ராதா, எம்.எஸ்.சுந்தரிபாய், நடித்திருந்தார்கள். ஜெமினி ஸ்டூடியோ தயாரித்தது. எம்.டி.பார்த்சாரதி இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்புவே எழுதினார். இன்றைய படங்கள் போன்று இரண்டேகால் மணிநேர படமாக உருவானது. படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்போது இந்த படத்தின் பிரண்டுகள் இல்லை.
230 days ago
230 days ago