ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்?
ADDED : 236 days ago
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'இந்தியன் 2, கேம் சேஞ்ஜர்' படங்கள் தொடர் தோல்வி படங்களாக அமைந்தன. இதனால் ஷங்கர் அடுத்த படமாக திட்டமிட்டிருந்த 'வேல்பாரி' தற்போது படமாக உருவாக வாய்ப்பில்லை என தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் நடிகர் விக்ரம், அவரின் மகன் துருவ் விக்ரமை கதாநாயகனாக வைத்து படம் இயக்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்தவித உறுதியும் செய்யப்படவில்லை என்கிறார்கள்.