தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்!
ADDED : 294 days ago
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' எனும் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தனுஷ் அடுத்து இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க கதைகளை கேட்டு வருகிறார்.
ஏற்கனவே போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் அல்லாமல் ‛லப்பர் பந்து' பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தான் வருகிறது. இப்போது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.