தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!
ADDED : 583 days ago
ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் ' தெரே இஸ்க் மெயின்' என்கிற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார்.
இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கின்றார் என சமீபத்தில் அறிவித்தனர். இந்த நிலையில் நீண்ட காலமாக முன் தயாரிப்பில் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பை நேற்று டில்லியில் தொடங்கியுள்ளனர். இணையத்தில் தனுஷின் ஷுட்டிங் புகைப்படங்கள் கசிந்து வருகிறது. இப்படம் வரும் நவம்பர் 28ம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.