வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்!
ADDED : 241 days ago
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் புதிய வெப் தொடரை ‛அம்மு' எனும் வெப் தொடரை இயக்கிய சாருகேஷ் சேகர் என்பவர் இயக்குகிறார்.
இந்த வெப் தொடரில் ஏற்கனவே மாதவன் நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது மாதவனுடன் இணைந்து மற்றொரு முதன்மை கதாபாத்திரங்களில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளனராம். இதில் துல்கர் சல்மானுடன் உள்ள பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.