உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரே படத்தில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி மகள்

பிளாஷ்பேக்: ஒரே படத்தில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி மகள்

'பாரத ரத்னா' விருது பெற்ற கர்நாடக இசை பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி. ஆரம்ப காலகட்டங்களில் அவர் சேவாதனம், சகுந்தலை, சாவித்ரி, மீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இவரது வளர்ப்பு மகள் ராதா விஸ்வநாதன். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர் சதாசிவத்தின் முதல் மனைவி அபிதகுஜலாம்பாளின் மகள். அபியின் மரணத்திற்கு பிறகு எம்.எஸ்.சுப்புலட்சுமிதான் ராதாவை வளர்த்தார்.

நாட்டியத்திலும், கர்நாடக சங்கீதத்திலும் சிறந்து விளங்கிய ராதா, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரிகளில் வீணை வாசித்தார். அவருடன் இணைந்தும் பாடியும் உள்ளார். 'மீரா' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் இளம் வயது மீராவாக நடித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மிகவும் புகழ்பெற்ற படம் இது.

இந்த படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி மீராவாக நடித்தார், சித்தூர் நாகய்யா ரானாவாக நடித்தார், செருகளத்தூர் சாமா ரூபா கோஸ்சுவாமியாக நடித்தார். இதில் ராதா, மீராவின் இளம் வயது கேரக்டரில் நடித்தார். இதில் அவர் நடிப்பு பாராட்டப்பட்டாலும் அதன் பிறகு சினிமாவில் நடிக்க மறுத்து விட்டார். இறுதிவரை தனது தாயின் இசை பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ராதா, தனது 83வது வயதில் பெங்களூருவில் காலமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !