மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
202 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
202 days ago
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'மதராஸி' எனத் தலைப்பு வைத்து அதற்கான அறிவிப்பு, டைட்டிலுக்காக ஒரு வீடியோ முன்னோட்டம் என வெளியிட்டார்கள்.
இதே 'மதராஸி' தலைப்பில் 2006ம் ஆண்டில் அர்ஜுன் இயக்கம் நடிப்பில் ஒரு படம் வந்தது. அந்தப் படம் பிப்ரவரி 17ம் தேதிதான் வெளியாகி உள்ளது. அந்தப் படம் வெளியான அதே நாளில் நேற்று இந்த புதிய 'மதராஸி' படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். நேற்று சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் இந்த அறிவிப்பு வந்தது. ஆனாலும், அதிலும் இரண்டு 'மதராஸி'க்கும் ஒரு ஒற்றுமை அமைந்துவிட்டது.
2006ல் வெளிவந்த 'மதராஸி' படத்தின் கதைக்களம் மும்பையை மையமாகக் கொண்டது. தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்பவர்களை மதராஸி என்றே அழைப்பார்கள். சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்தின் கதைக்களமும் தமிழகத்திற்கு வெளியே மும்பையில் நடக்கும் கதைக்களமாக இருக்கும் எனத் தெரிகிறது. அதனால்தான் கதைக்குப் பொருத்தமாக பழைய பெயரை வைத்துள்ளதாக ஒரு தகவல்.
202 days ago
202 days ago