மேலும் செய்திகள்
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
202 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
202 days ago
சீரியலில் உச்சம் தொட்ட நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் கேப்ரில்லா செல்லஸ். கருப்பழகி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், நடிப்பின் மீதிருந்த தீரா காதலால் சென்னைக்கு வந்தார். சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு சின்னத்திரை சீரியலான சுந்தரி மிகப்பெரிய அளவில் பெயர் புகழை பெற்று தந்தது.
சுந்தரி சீசன் 1 முடிந்த பிறகு சீசன் 2 வில் நடிக்க ஆரம்பித்த அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் அந்த சீரியலை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கேப்ரில்லாவின் கதாபாத்திரத்தில் அவரை தவிர வேறுயாரும் செட் ஆகமாட்டார்கள் என்பதால் அந்த சீரியலையே முடித்து வைத்துவிட்டனர். சுந்தரி சீசன் 2 கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது.
இதனையடுத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்ட கேப்ரில்லாவுக்கு அண்மையில் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுந்தரி சீரியல் குடும்பத்தினர் கேப்ரில்லாவின் சொந்த ஊருக்கே சென்று அவரது வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். சுந்தரி சீரியலில் கேப்ரில்லாவுக்கு மகளாக நடித்த தமிழ் பாப்பாவை கூட அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் மனம் நெகிழ்ந்த கேப்ரில்லா இதனை தனது இன்ஸ்டாகிராமில் வைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ரசிகர்களும் கேப்ரில்லாவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
202 days ago
202 days ago