மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
201 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
201 days ago
கடந்த டிசம்பர் மாதம் மலையாளத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹனீப் அதேனி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளியான இந்த படம் அதிக வன்முறை காட்சிகளுடன் வெளியானாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. அது மட்டுமல்ல ஹிந்தியில் இந்த படம் வெளியான போது கூட அங்கேயும் திரையரங்குகளில் அதிக காட்சிகளை பெற்றது. இந்த படத்தில் வில்லன் நடிகர் ரியாஸ் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் வெளியான போது அவர் நடித்த ஒரு காட்சி கூட படத்தில் இடம் பெறவில்லை. இதுகுறித்து அதிர்ச்சியான அவர் அப்போது தன்னுடைய வருத்தத்தை ஊடகங்கள் மூலமாக பதிவு செய்திருந்தார்.
அப்போது மார்கோ படக்குழுவினர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரியாஸ் கானின் காட்சிகள் படத்தின் இடம் பெறவில்லை என்றும் நிச்சயமாக ரசிகர்களின் பார்வைக்கு அவர் நடித்த காட்சிகள் காட்டப்படும் என்றும் கூறியிருந்தனர். தற்போது அதை நிறைவேற்றும் விதமாக யு-டியூப் சேனலில் உன்னி முகுந்தன் மற்றும் ரியாஸ் கான் இருவரும் காவல் நிலையத்தில் மோதும் மூன்று நிமிட சண்டைக்காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இந்த சண்டைக் காட்சியை இதுவரை கிட்டத்தட்ட 5 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
201 days ago
201 days ago