டீசலில் துள்ளல் போட வைக்கும் சிம்பு பாடிய பாடல்
ADDED : 271 days ago
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'டீசல்'. அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திபுநினன் தாமஸ் இசையமைக்கிறார். நீண்டகால தயாரிப்பாக இப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து 'பீர் சாங்' என்ற பாடல் வெளியாகி டிரெண்ட் ஆனது. இப்போது இரண்டாவதாக 'தில்லுருபா ஆஜா' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் சிம்பு தனது சிக்னேச்சர் ஸ்டைலில் பாடி உள்ளார். அவருடன் ஸ்வேதா மோகனும் பாடி உள்ளார். இந்தப் பாடலுக்கு ஹரிஷ் கல்யாணின் ஹூக் ஸ்டெப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. துள்ளலாக வெளியாகி உள்ள இந்த பாடலை 7 லட்சத்திற்கும் அதிகமானபேர் யுடியூப் தளத்தில் பார்த்து ரசித்துள்ளனர்.