பராசக்தி யூனிட்டுக்கு பிரியாணி விருந்து தந்த சிவகார்த்திகேயன்
ADDED : 258 days ago
அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் பராசக்தி படத்தில் அவருடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிப்., 17ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி பராசக்தி படக்குழுவினரோடு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன், யூனிட்டுக்கு தனது கையால் பிரியாணியும் பரிமாறி உள்ளார். அது குறித்த வீடியோவை இயக்குனர் சுதா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இயக்குனர் சுதா, அதர்வா உள்ளிட்ட பலருக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி பரிமாறும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதோடு நித்த நித்த நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய் என்ற பாடலும் பின்னணியில் ஒலிக்கிறது.