மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
224 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
224 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
224 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
224 days ago
நடிகை நயன்தாரா தற்போது டியர் ஸ்டூடன்ஸ், டாக்சிக், ராக்காயி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். தங்களது மகன்களான உயிர், உலக் ஆகிய இருவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது இணைய பக்கங்களில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது காரில் விக்னேஷ் சிவனின் மடியில் மகன்கள் இருவரும் உட்கார்ந்தபடி ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தில் அனிருத்தின் இசையில் வெளியான ‛பத்த வைக்கும் பார்வைக்காரி...' பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். அதோடு பாடலின் இடையில் வரும் அந்த ‛ஹான்' என்ற குரலுக்கு குழந்தைகளும் ‛ஹான்' என்று சொல்லுகிறார்கள்.
இந்த வீடியோவை இணையப்பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விக்னேஷ் சிவன், ‛ரிதம், டைமிங், மியூசிக்தானே நமக்கு உயிர் உலகம் வாழ்க்கை எல்லாமே...' என்று ஒரு பதிவு போட்டிருக்கிறார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
224 days ago
224 days ago
224 days ago
224 days ago