உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்து இரண்டு சீரியல்களில் கமிட்டான ஷோபனா

அடுத்தடுத்து இரண்டு சீரியல்களில் கமிட்டான ஷோபனா


டிக் டாக் பிரபலமான ஷோபனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‛முத்தழகு' சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த தொடர் இவருக்கு அதிக அளவில் பெயர் புகழை பெற்று தந்ததுடன் ஏராளமான ரசிகர் கூட்டத்தையும் கொடுத்துள்ளது. இந்நிலையில், முத்தழகு தொடர் அண்மையில் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து விஜய் டிவியிலேயே ‛பூங்காற்று திரும்புமா' என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சின்னத்திரையில் ஷோபனாவுக்கான மார்க்கெட் அதிகரித்து வருவதையடுத்து தற்போது அவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‛மீனாட்சி' என்கிற தொடரிலும் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என்ற தகவல் சின்னத்திரை வட்டாரங்களில் கசிந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள ஷோபானவின் ரசிகர்கள், ஷோபனாவின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !